ஒரே மன உளைச்சல், பணி சுமை! SIR பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மயக்கம்
சோளிங்கரில் எஸ் ஐ ஆர் பணி மேற்கொண்ட தேர்தல் துணை வட்டாட்சியர் மயக்கமடைந்த நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழகத்தில் எஸ் ஐ ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சோளிங்கர் தேர்தல் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வரும் பிள்ளையார் என்பவர் எஸ் ஐ ஆர் பணி மேற்கொண்டு போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்ட சக பணியாளர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ள காலக்கேடு கொடுத்துள்ளதாகவும், இதனால் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாமலும் தற்போது வழங்கப்பட்டுள்ள எஸ்ஐஆர் பணிகளை தொடர முடியாமலும் மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தற்போது அரசுத்துறை பணியாளர்கள் புலம்பி வருகின்றனர். நாளை முதல் இருந்து வருவாய் துறை சார்ந்த அதிகாரி யாரும் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் பணிகளை மேற்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.


