ஓ.பன்னீர்செல்வத்துக்கான Y+ பிரிவு பாதுகாப்பு வாபஸ்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு (ஓபிஎஸ்) வழங்கப்பட்டு வந்த 'ஒய்+' (Y+) பிரிவு மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு, அது 'எக்ஸ்' (X) பிரிவு பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்க்கு அளிக்கப்பட்டிருந்த ஒய்+ பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு, எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒய்+ பிரிவில் (Y+ Security) 2 முதல் 4 கமாண்டோக்கள் உட்பட மொத்தம் 11 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். எக்ஸ் பிரிவில் (X Security)மொத்தம் 2 காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். 2017 ஏப்ரல் மாதம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதாவது 2017-ல் தர்மயுத்தம் நடத்திய போது, ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என Z பிரிவு பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் வழங்கியது. Y+ பிரிவு பாதுகாப்பின்படி, பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் இடம்பெற்று இருந்தனர்.

