பா.ஜ.க கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை - காரணம் இதோ..!

 
1

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், பா.ஜ.க கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணிக்கும் இடம் ஒதுக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

பா.ஜ.க: 20

பா.ம.க.:10

தமிழ் மாநில காங்கிரஸ்; 3

அமமுக: 2

ஐ.ஜே.கே.: 1

புதியநீதி கட்சிக்கட்சி; 1

இந்திய மக்கள் முன்னேற்ற கழகம்: 1

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்; 1

39 தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இதன்படி பார்த்தால் பா.ஜ.க கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. பா.ஜ.க கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஓபிஎஸ் அளிப்பார் என்று சொல்லப்படுகிறது.