அண்ணாவின் 115வது பிறந்த நாள் - ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை

 
ops

அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தனது ஆதரவாளர்களுடன் சென்று அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். 


இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், மக்கள் நல்வாழ்வு பெற வேண்டுமானால் பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடையே பரப்பி, அவர்களுடைய ஆதரவோடு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் போற்றி வணங்குகிறேன்.  காலத்தை வென்று நிற்கும் அவருடைய முத்தான எண்ணங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.