மருது சகோதரர்களின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

மதுரை - தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் சிலைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மருது சகோதரர்களின் 222 வது நினைவு தினம் கடந்த 27 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.
மதுரை - தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/p7nV98qWMU
— O Panneerselvam (@OfficeOfOPS) October 30, 2023
இந்த நிலையில், மதுரை - தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் சிலைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை - தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்களின் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.