நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது... வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும் - வைத்திலிங்கம்

 
vaithilingam

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேர் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை ஆரம்பித்த போது அவர் வளர்த்துக் கொடுத்த நீதி எங்களுக்கு ஆதரவாக உள்ளது. நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது. வெற்றி எங்களுக்கு கிட்டும். கட்சி, சின்னத்தை நாங்கள் இன்னும் இழக்கவில்லை. தேர்தல் கமிஷன் அவர்களுக்கு சின்னம் கொடுக்கவில்லை, கட்சி சின்னமும், கட்சியும் எங்களிடம் தான் உள்ளது. நேரம் வரும்பொழுது அதிமுக கட்சி தலைமை அலுவலகம் எங்கள் கைக்கு வரும். இந்த நேரத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பிட்பாக்கெட் அடிக்கும் திருடனுக்கு நிகரானது. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இவ்வாறு கூறினார்.