உறுப்பினர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை - ஓபிஎஸ் பதில்!
இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக பல்வேறு அணிகளாக பிளவுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரனின் அமமுக என பல அணிகளாக உள்ளன. இதனிடையே அதிமுக சின்னம், கொடி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் அதிமுக உட்கட்சி தொடர்பாக பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பம் மீது ஓபிஎஸ் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டப்படி செல்லும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தனது பதவிக்காலம் டிசம்பர் 2026 வரை உள்ளது. அ.தி.மு.கவின் அடிப்படை விதிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.கட்சியின் கொள்கைகளை வகுக்கவே பொதுக்குழுவுக்கு அதிகாரம் - உறுப்பினர்களை நீக்க அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.