அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்- ஓபிஎஸ்

 
o

சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். ஒன்றரை மணி நேரத்திற்கு மேலான சந்திப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.

Ex-TN CM Panneerselvam hosptialised over Covid-related ailments


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஓ.பன்னீர் செல்வம்,  எம்.ஜி.ஆர்,அம்மா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாகவே அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை சந்தித்தோம். நாங்கள் முழுமையாக நம்புவது அதிமுகவின் முழுமையான தொண்டர்களை மட்டுமே தொண்டர்கள் என்ன மனநிலையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்த வழியில் தான் என்னுடைய அரசியல் பயணம் இருக்கும்.  அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அது ஒன்றுதான் எங்களுடைய இதயபூர்வமான ஏற்பாடு. எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளாஇ பொருத்திருந்து பாருங்கள்” எனக் கூறினார்.