அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி? - சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்

 
ops

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.  இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,   அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கட்சியின் சட்ட விதியின் படி பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்.  காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறாது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அதிமுக தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமான பெறலாம் என்றும் , விதிமுறைகளை பின்பற்றி விருப்பமுனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
 

Ops

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், M.L.A. அவர்கள் இன்று (18-03-2023 - சனிக்கிழமை) காலை 11-30 மணியளவில் சென்னை-28, இராஜா அண்ணாமலைபுரம், கதவு எண் 154, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும், புகைப்படக் கலைஞர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.