ஒரே காரில் ஓ. பன்னீர் செல்வம் - செங்கோட்டையன்..!
முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பயணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர்.
ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்க உள்ளனர். மதுரையில் இருந்து ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணித்து வரும் நிலையில், பசும்பொன்னில் வைத்து 4 தலைவர்களும் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, செய்தியாளர்களை சந்திப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தோடு ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்திருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.
தலைமைக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவாரா?


