இன்று முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!!

 
Q Q
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.
இந்த நிலையில், சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குனர் சங்கீதா, இணை இயக்குனர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.