நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
Jan 19, 2026, 16:30 IST1768820423000
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

காலமுறை ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாளை (ஜனவரி 20) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 313ஐ நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இப்போராட்டத்தில் சுமார் 71 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். திமுக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை வெறும் கண் துடைப்பு என்றும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.


