டெங்கு காய்ச்சலுக்கு நர்சிங் மாணவி பலி

 
டெங்கு டெங்கு

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு நர்சிங் மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Death

புதுச்சேரி மூலக்குளம் ஜெ ஜெ நகரை சேர்ந்தவர் ராமு. இவர் திருவண்டார் கோவில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகள் லோகேஸ்வரி கோரிமேடு பகுதியில்  உள்ள அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் நான்காவது வருடம் படித்து வந்தார். கடந்த 5 ஆம் தேதி காய்ச்சல் இருந்துள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காண்பித்து பரிசோதனை செய்ததில் இவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதியானது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து டெங்கு அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளனர். இந்நிலையில் சென்னைக்கு அழைத்து சென்ற போது வழியில் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. அங்கிருந்து திரும்பி புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது லோகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.