சென்னையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

 
1

சென்னை செங்குன்றம் அருகே, அலமாதி எடப்பாளையத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆனந்தகுமாரின் மகள் ஜஸ்வினிஸ்ரீ (18), தனியார் நர்சிங் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருந்ததால், கல்லூரி ஆசிரியை அவரை திட்டியதாக கூறப்படுகிறது. மனவேதனையில் இருந்த மாணவி நேற்றிரவு தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மாணவி மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். 

தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.