செவிலியர்கள் போற்றப்பட வேண்டும் - ராமதாஸ், அன்புமணி வாழ்த்து!!

 
pmk

உயிர்காக்கும் உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும்  என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

nurse

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மக்களின் ஆரோக்கியம். மக்களின் ஆரோக்கியத்தை, மக்களுக்கு நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அளிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள் செவிலியர்கள்.  அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே மாதம் 12-ஆம் நாள் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் உலக செவிலியர் தினத்தை கொண்டாடும் அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

 


இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், "உயிர்காக்கும் உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும் :  உலகின் மிக உன்னதமான பணி உயிர் காக்கும் பணி தான். ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்களும், செவிலியர்களும் தான். இரவும் பகலும் பார்க்காமல் நோயர்களின் நலனைக்காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து நைட்டிங்கேல்களுக்கும் எனது செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.  அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ்,  மருத்துவப் பணியாற்றும் மனித தேவதைகளுக்கு செவிலியர் நாள் வாழ்த்துகள்!!  உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தாயாகி  சேவை வாய்ப்பு செவிலியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். மருத்துவர்களுடன் இணைந்து நோயர்களைக் காக்கும் மனித தேவதைகள் அவர்கள். மற்றவர்களின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து செவிலியர்களுக்கும்  உலக  செவிலியர் நாளில் எனது  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.