யாருக்கும் தெரியாமல் தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் : குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்..!

 
1

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் திருமணம் செய்துகொள்ளாமல் காதலருடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். 7 மாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி வரவே, தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையின் கால்களை அவரே வெட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா (24) டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் தி. நகர் சவுத்போக் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதில் வினிஷா கர்ப்பமாகியுள்ளார். 7 மாதங்கள் ஆன அவருக்கு, திடீரென தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்து மறைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த நிலையில் சிசுவை வெளியே இழுக்க முயற்சித்தார். இதில் கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து வலிய இழுத்தார். இந்த முயற்சியில் சிசுவின் கால்கள் பிய்த்துக்கொண்டு தனியே வர, குழந்தையும் இறந்தே பிறந்தது. 

இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  இறந்த குழந்தையை பத்திரப்படுத்திய மருத்துவர்கள் வினிஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தியாகராய நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.