மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து நர்ஸ் தற்கொலை

 
n

தனியார் மருத்துவமனையில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து நர்ஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் . தகவல் அறிந்த உறவினர்கள் தங்கள் மகளின் சாவில் சந்தேகம் உள்ளது என்று சொல்லி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர் . இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது .

திருச்சியில் வயலூர் சாலை குமரன் நகர் பேருந்து நிறுத்தத்தின் அருகே ரத்னா மெடிக்கல் சென்டர் என்கின்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. சோமரசம்பேட்டை அடுத்த அல்லித்துறை சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நிவேதா லட்சுமி என்கிற 19 வயது இளம்பெண் இங்கு நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். 

 நேற்று காலையில் இவர் வழக்கம் போல  வேலைக்கு சென்று இருக்கிறார் .  மருத்துவமனையில் பணியில் இருந்த போது மதியம் மூணு மணி அளவில் திடீரென்று நிவேதா லட்சுமி மருத்துவமனையின்  ஐந்தாவது மாடிக்கு படி வழியாக ஏறி சென்று இருக்கிறார்.   அங்கிருந்தபடி திடீரென்று கீழே குதித்து இருக்கிறார்.  அப்போது அருகில் இருந்த மின்சார கம்பியில் உடல் பட்டிருக்கிறது.  

u

 மின்சாரக் கம்பியில் பட்டு அவர் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார்.  இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து நிவேதா லட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த நிவேதா லட்சுமி அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

 இதன் பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் , உறவினர்கள் என்று 50க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்திருக்கிறார்கள்.   எங்கள் மகளின் சார்பில் மர்மம் இருக்கிறது . அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் அவளின் சாவில் சந்தேகம் இருக்கிறது என்று போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தி இருக்கிறார்கள்.   இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.  பின்னர் போலீசார் சமாதானம் நடத்தி கொண்டிருந்த நிலையில்,  பெற்றோரும் உறவினர்களும் ரத்னா மெடிக்கல் சென்டர் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

 இதை அடுத்து போலீசார் சென்று வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்துவதாக சொன்னதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு உள்ளார்கள். 
நிவேதாலட்சுமி இந்த மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது.   இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது .  காதல் விவகாரம் காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.