கள்ளச்சாராய விற்பனை குறித்து புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!!

 
tn

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ttn

இதை போல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்ததில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க போலீசார் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.  வேலூர் மாவட்டத்தில் 9445463494,  9498111155 என்ற எண்ணிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6379904848 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்க்கது.