புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிப்பு!

 
1

பிரயாக்ராஜில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் மகாகும்பத்தில் முதல் மூன்று அரச நீராடல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து மாசி பௌர்ணமி நீராடலிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் மகாகும்ப நகரத்திற்கு வருகை தந்ததால், உலகின் இரண்டு பெரிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமாக இது மாறியுள்ளது. ஒன்றரை மாதங்களில் பிரயாக்ராஜுக்கு வந்த மொத்த மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும் 

ஒரு மாதத்திற்குள் பிரயாக்ராஜுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடியை எட்டியுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, உலகின் 234 நாடுகள் மற்றும் தீவுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகை 30 நாட்களுக்குள் மகாகும்ப நகரத்தில் கூடியுள்ளது. இந்த எண்ணிக்கையை விட அதிகமாக இந்தியா (மக்கள்தொகை 145 கோடி) மற்றும் சீனா (மக்கள்தொகை 141 கோடி) மட்டுமே உள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா (மக்கள்தொகை 34.54 கோடி), இந்தோனேசியா (28.34 கோடி) மற்றும் பாகிஸ்தான் (25.12 கோடி) ஆகிய நாடுகளின் மக்கள்தொகையை விட பிரயாக்ராஜுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தற்போது பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பம் 2025 இல் இன்று 32வது நாளில் பக்தர்கள் கூட்டம் புதிய வரலாறு படைத்து 50 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. மகாகும்பம் இந்த மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும், இதன் நிறைவுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது.