தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்- சீமானின் அதிரடி தேர்தல் அறிக்கை வெளியீடு

 
election manifesto

49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள், இட பங்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனித் தொகுதிகள் போராடுப் பெறப்படும் என்பது உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார். மேலும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தனி மருத்துவமனை அமைக்கப்படும். நோயாளிகளின் உறவினர்கள் தங்க தனி விடுதி அமைக்கப்படும். சிபா ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். எல்லா ஊர்களிலும் விளையாட்டு பயிற்சி கூடம் அமைக்கப்படும் என நானூறு பக்கதிலான தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார்.