நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் NIA விசாரணைக்கு ஆஜர்!

 
ntk

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆஜராகினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரில் என்ஐஏ நடவடிக்கை எடுத்தது. இதேபோல் சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் உள்ளிட்டோர் வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாரு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆஜராகினர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோர் NIA விசாரணைக்கு ஆஜராகினர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகினர். சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.