நடிகை விஜயலட்சுமி தன் மீது வீண் பழி சுமத்துகிறார் - சீமான் பரபரப்பு பேட்டி

 
இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

நடிகை விஜயலட்சுமி தன் மீது வீண் பழி சுமத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையரை கடந்த 28ஆம் தேதி நேரில் சந்தித்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.  

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை விஜயலட்சுமி போராட்டம்!

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி தன் மீது வீண் பழி சுமத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது விஜயலட்சுமி புகார் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய சீமான், தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது. விசாரித்து என் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கட்டும். குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை, எங்கும் ஓடி ஒளியவில்லை. இவ்வாறு கூறினார்