வடமாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுக தான் பரப்பி வருகிறது - சீமான்

 
Seeman

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல சர்ச்சையை திமுகவும், காங்கிரசும் திட்டமிட்டு பரப்பி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். 

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் குறவன் சாதி சான்றிதழ் கேட்டு, அந்த சமூதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 8 வது நாளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தார். 

seeman

பின்னர் செய்தியாளரகளை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: குறவன் இன மக்கள் கடந்த 7 நாட்களாக பசியும் பட்டினியுமாக போராடி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு உடனடியாக சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை இல்லை என்றால் துறை சார்ந்த அமைச்சரை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். இந்த போராட்டத்தை மக்கள் தொடர்ந்து நடத்த வேண்டும். வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை தி.மு.க.வும், காங்கிரசும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.