நடிகை விஜயலட்சுமியின் குற்றாச்சாட்டுக்கு சீமான் பதில்!

 
seeman

நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பதில் அளித்துள்ளார். 

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையரை இன்று நேரில் சந்தித்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து  நடிகர் விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தபோது , சீமானை காப்பாற்றியது அதிமுக அரசு, என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன் . சீமானை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்… விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இந்த விவகாரத்தை அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைகிறேன். எனக்கு கோடி கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.