ஆவேச பேச்சு...தேர்தலில் காணாமல் போச்சு - வீரப்பனின் மகள் சோகம்!

 
ee

கிருஷ்ணகிரி தொகுதியில் நாதக வேட்பாளர் வீரப்பனின் மகள் வித்யாராணி பின்னடைவை சந்தித்துள்ளார்.

tt

கிருஷ்ணகிரி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான  காங்கிரஸ் சார்பில் கே. கோபிநாத் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, அதிமுக சார்பில் வி.ஜெயபிரகாஷ் , நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வழக்கறிஞர் வித்யா ராணி, பாஜக சார்பில் சி,நரசிம்மன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 7135 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.  அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 4,360 வாக்குகளை பெற்றுள்ளார்.

rrr

 பாஜக வேட்பாளர் நரசிம்மன் 3092 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா ராணி 1653 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.