மக்களவை தேர்தல் - நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 
tn

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார். தென்காசி தொகுதிக்கு மயிலை ராஜண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.