“வீரமணி வழக்கை திசை திருப்பும் வேலையில் நிர்மல்குமார் ஈடுபடுகிறார்”- என்.ஆர். இளங்கோ

 
s

நிர்மல் குமாரின் திசை திருப்பும் வேலைகளால் வீரமணி வழக்கே நீர்த்துப் போகும். அவதூறு பரப்பினால், அவதூறு வழக்கு தொடரப்படும் என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.இளங்கோ, “ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் நீர்த்துப் போகச் செய்ததாக, அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பேசியிருப்பது முற்றிலும் தவறானது. 2025 நவம்பர் 7ல் திமுக ஆட்சியில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரின் வீடு சோதனையிடப்பட்டு அப்போதைய ஆதாரங்கள் அடிப்படையில் புலன் விசாரணை செய்யப்பட்டது.‘வழக்கை கைவிடவில்லை, உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றே போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. வீரமணி மீது போடப்பட்ட போக்சோ வழக்கை திசை திருப்பவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்க வைக்கவும் அமைச்சர் நிர்மல் குமார் இப்படி பேசி வருகிறார்” எனக் கூறினார்.