“14 இயந்திரங்களில் 5 இயந்திரங்களில் பிரச்சனை உள்ளது.. EVM மெஷினே பிரச்சனையா இருக்கு”- என்.ஆர். இளங்கோ

 
“14 இயந்திரங்களில் 5 இயந்திரங்களில் பிரச்சனை உள்ளது.. EVM மெஷினே பிரச்சனையா இருக்கு”- என்.ஆர். இளங்கோ 

கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை இன்றுடன் நிறைவடைந்ததாக திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை இன்றுடன் நிறைவடைந்தது. 14 இயந்திரங்களில் 5 இயந்திரங்களில் பிரச்சனை உள்ளது. வாக்கு இயந்திரங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளதால் நிச்சயம் வழக்கு தொடர்வோம். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் 30 விழுக்காடு இயந்திரங்கள் மீது சந்தேகம் உள்ளது. மு.க.ஸ்டாலின் பெயர் இருந்த பேலட் யூனிட்டை கண்ட்ரோல் யூனிட் அடையாளம் காணவில்லை. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்ரார்.