இனி வாட்ஸ் அப் மூலமும் பில் கட்டலாம் - மெட்டாவின் புதிய அறிவிப்பு

 
s

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி செயலியிலிருந்தே நேரடியாக மின்சாரம், சமையல் எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டணங்களைச் செலுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி செயலியிலிருந்தே நேரடியாக மின்சாரம், சமையல் எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டணங்களைச் செலுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்' நெட்வொர்க் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.இதன் மூலம் மின்சாரம், கேஸ், குடிநீர், பாஸ்டேக், இன்சூரன்ஸ், கிரெடிட் கார்டு மற்றும் கடன் தவணைகள் உட்பட 30 பிரிவுகளின் கீழ் உள்ள சுமார் 22,722 சேவை வழங்குநர்களுக்குக் கட்டணம் செலுத்த முடியும்

Bharat Connect WhatsApp-லேயே மின்சாரம், எரிவாயு, குடிநீர், FASTag, காப்பீடு, கிரெடிட் கார்டு, கடன் உள்ளிட்ட பில்களை செலுத்தலாம். வாட்ஸ் அப் மூலம் 30 வகைகளில் 22,722 பில் நிறுவனங்களின் சேவைகளை அணுக முடியும். UPI, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம். கடந்த மற்றும் வரவிருக்கும் பில்களையும் பார்க்கலாம். WhatsApp முகப்பில் மேல்பகுதியில் உள்ள ரூபாய் குறியீட்டை அழுத்தி இந்த வசதியைப் பயன்படுத்தலாம். புதிய வசதி Android, iOS பயனர்களுக்கு வரும் வாரங்களில் படிப்படியாக கிடைக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.