இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம் - மத்திய மந்திரி தகவல்..!!
மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-
புனிதமான இருமுடியுடன் தொடர்புடைய உணர்வுகளை மதிக்கும்வகையில், விமானங்களில் அய்யப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச்செல்ல அனுமதிப்பது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பொருட்கள் வைக்கும் பகுதியில் எடுத்துச்செல்லாமல், பயணிகள் பகுதியில் தங்களுடனே வைத்துக்கொள்ளும் ‘கேபின் லக்கேஜ்’ ஆக கொண்டு செல்லலாம். இதன்மூலம் அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் அதே வேளையில், பக்தர்களின் உணர்வுகளுக்கு முழு மதிப்பு அளிக்கப்படும். அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
స్వామియే శరణం అయ్యప్ప!
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) November 28, 2025
శబరిమల పవిత్ర యాత్రలో పాల్గొనే అయ్యప్ప భక్తుల సౌలభ్యం కోసం, ఇరుముడికి ఉన్న పవిత్రత, భావోద్వేగాల్ని గౌరవిస్తూ, భక్తులు ఇరుముడి ని తమతో పాటు నేరుగా విమాన ప్రయాణంలో తీసుకెళ్లేందుకు మా పౌర విమానయాన మంత్రిత్వ శాఖ అనుమతి ఇచ్చింది అని తెలియజేయడానికి… pic.twitter.com/QT6JGV45Ng