இனி மனித கழிவை மனிதனே அள்ளும் நிலை மாறுகிறது! - பாதாள சாக்கடை திட்டம் முற்றிலும் இயந்திரமயமாக்கப்படுகிறது - முதல்வர் விஜய்..!

1

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட அறிக்கைகள்

தமிழ்நாட்டில் நிலையான நகர வளர்ச்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி பேரூராட்சிகளுக்கான திட்ட அறிக்கைகள் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கத்தின் (Chief Minister's Integrated Urban Development Mission-CMIUDM) கீழ் உருவாக்கப்படும்.

2. குடிநீர் வழங்கல் திட்டங்கள்

I. கோயம்புத்தூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் தற்போது 58 வார்டுகளில் தினந்தோறும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, மீதமுள்ள 42 வார்டு பகுதிகளுக்கும் தினந்தோறும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

II. கன்னியாகுமரி மாவட்டத்தில், குழித்துறை ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, கன்னியாகுமரி நகராட்சி, 17 பேரூராட்சிகள் மற்றும் 5 ஒன்றியங்களில் உள்ள 286 வழியோர குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் மற்றும் தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தவும் உரிய ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

3. பாதாளசாக்கடை திட்டங்கள்

I. தாம்பரம் மாநகராட்சியில் மண்டலம் 2 மற்றும் 3 க்கு உட்பட்ட பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எற்கனவே செயல்பட்டு வரும் பாதாளசாக்கடை திட்டம் புனரமைத்தல் பணியும், செயல்படுத்தப்படாமல் விடுபட்டுள்ள திருநீர்மலை பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாளசாக்கடை திட்டப் பணியும் ஒட்டுமொத்தமாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

II. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் (CMWSSB) மொத்தம் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (STPs) இயக்கி வருகிறது. தூய்மையான எரிசக்திக்கான அதிகரித்து வரும் தேவை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை ஊக்குவிக்கும் விதமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கழிவுக் கசடிலிருந்து உருவாகும் உயிரி வாயுவை (Bio Gas) Compressed Bio Gas ஆக தரம் உயர்த்தி வணிகமயமாக்கப்படும்.

III. கோயம்புத்தூர் மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கும், சிவகாசி மாநகராட்சிக்கு முழுமையாகவும், கோவில் நகரமான திருச்செந்தூர் நகராட்சியில் நகரத்தின் சுகாதாரத்தை மையப்படுத்தி நகரம் முழுமைக்கும் பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

4. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

i. வெற்றித்தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) ஆகியவை நிர்ணயம் செய்த தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கும், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், திருவொற்றியூரில் அமைந்துள்ள 31 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புனரமைத்து மேம்படுத்துதல், Moving Bed Biofilm Reactor (MBBR) முறையிலான மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

II. பாதாளசாக்கடை திட்ட கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளை முற்றிலுமாக இயந்திரமயமாக்கும் நோக்கத்தில் பல்வேறு நவீன இயந்திரங்கள் 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பயன்படுத்தப்படும்.

III. கழிவுநீர், ஓடைகள் மற்றும் ஆறுகளில் நேரடியாகக் கலப்பதைத் தடுப்பதன் மூலம் நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பதற்கு, உரிய இடங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 15 பேரூராட்சிப் பகுதிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

5. பழைய திடக்கழிவுகளை உயிரி அகழ்வு (Bio mining) முறையில் அகற்றுதல்

i. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் ட்ரோன் (Drone) ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ள 29 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கூடுதல் பழைய குப்பைகள் (Legacy Waste) 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயிரி அகழ்வு' (Bio mining) முறையில் அகற்றப்பட்டு, நிலம் மீட்கப்படுவதுடன் பொதுமக்களின் சுகாதாரமும் வாழ்வாதாரத் மேம்படுத்தப்படும். தரமும்

ii. குப்பைக் கிடங்கில் உள்ள பழைய திடக்கழிவுகள் (Legacy Waste) உயிரி அகழ்வு முறையில் (Bio mining) அகற்றுதல் திட்டம் ஆவடி, தாம்பரம், கோயம்புத்தூர் மாநகராட்சிகளிலும் மற்றும் 25 நகராட்சிகளிலும் 93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

6.திடக்கழிவு மேலாண்மைக்கான வாகனங்கள் கொள்முதல்

வீடுகள் தோறும் திடக்கழிவுகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களின் பணியினை எளிமையாக்கும் பொருட்டு நகராட்சிகள், பேரூராட்சிகளில் 4,890 முதன்மை சேகரிப்பு வாகனங்கள், ஒட்டுமொத்தமாக 5050 வாகனங்கள் 262 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பயன்படுத்தப்படும்.

7.தெருவிளக்குகள்

'வெற்றித் தமிழகம்' தொலைநோக்குத் திட்டத்தின்படி பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பினை மற்றும் உறுதி செய்யும் விதமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஒரு இலட்சம் எல்.இ.டி (LED) விளக்குகள் தற்போதுள்ள அதிக மின் ஆற்றலை தெருவிளக்குகள் செலவிடக்கூடிய விளக்குகள் அமைக்கப்படாத விடுப்பட்ட அகற்றப்படும் பகுதிகளிலும், தெரு பகுதிகளிலும் புதிதாக அமைக்கப்படும்.

8.மழைநீர் வடிகால்கள்

I. 'வெற்றித் தமிழகம்' திட்டத்தின்படி தொலைநோக்குத் பெருநகர சென்னை மாநகராட்சியின் வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அண்ணா நகர் மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பருவமழையின் போது வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் ஓட்டேரி நல்லா கால்வாய் ஜீரோ பாயின்ட் முதல் கூவம் நதி வரை ஜவஹர்லார் நேரு சாலையில் மழைநீர் வடிகால் அமைப்புகள் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

II. வெள்ள அபாய நகரங்களான கடலூர், தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் கன்னியாகுமரி, நாகப்பட்டினம் நகராட்சிகளில், நகர்ப்புர வெள்ள பாதிப்புகளை குறைக்கவும், மழைநீரை உரிய முறையில் வெளியேற்றவும் மேம்பட்ட மழைநீர் வடிகால் வசதிகள் 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

9.மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள்

மழைநீரை உறிஞ்சி நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும் நோக்கத்தில் திண்டுக்கல் காரைக்குடி, சிவகாசி மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சிகளில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் (Sponge Parks) அமைக்கப்படும்.

10.விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டுத் திடல்கள்

I. தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் சிவகாசி மாநகராட்சிகளில் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் நன்னடத்தையை இளைஞர்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் தரமான விளையாட்டு உட்கட்டமைப்புகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

II. பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்படும்.

III. மேலும், பிற மாநகராட்சிகள் நகராட்சிகளில் விளையாட்டுத் மற்றும் இளைஞர்களின் திறனை ஊக்குவிக்க 38 சிறிய விளையாட்டுத் திடல்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

11.பேருந்து நிலையங்கள்

வேட்டவலம், தேன்கனிக்கோட்டை, சேத்தியாத்தோப்பு, நீடாமங்கலம், வத்தலகுண்டு மற்றும் சாயல்குடி உள்ளிட்ட 15 பேரூராட்சிகளில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பேருந்து நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

12.நவீன எரிவாயு தகன மேடைகள்

தக்கோலம், காடையாம்பட்டி, ஆர்.புதுப்பட்டி, கொல்லன்கோவில், கிள்ளை மற்றும் மணலூர்பேட்டை உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், சுகாதாரமான முறையில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

13.நீர்நிலைகள் புனரமைத்தல்

பேரூராட்சிப் பகுதிகளில் நீர்மட்டத்தை நிலத்தடி உயர்த்தி, குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 நீர்நிலைகள் புனரமைக்கப்படும்.

14.மாநில அளவிலான கண்காணிப்பு மையம்

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் தினசரி சேவைகளான குடிநீர் விநியோகம், பாதாளசாக்கடை கட்டமைப்பு செயல்பாடுகள் மற்றும் திடக் கழிவு மேலாண்மை செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்க நிகழ்நேர கண்காணிப்பு மையம் (Real-time Monitoring Center) நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

15.ரேபிஸ் இல்லா தமிழ்நாடு

எதிர்வரும் ஆண்டுகளில் ரேபிஸ் இல்லா தமிழ்நாடு உருவாக்கும் நோக்கத்தில், தெரு நாய்களின் மூலம் மனிதர்களுக்கு பரவும் கொடிய ரேபிஸ் நோயை தடுக்கும் நோக்கில் ரேபிஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், தெரு நாய்களை பிடிப்பதற்கான வாகனங்கள் கொள்முதல் செய்தல், தெருநாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து பராமரிப்பதற்கான மையங்கள் மற்றும் அவற்றின் தங்குமிடங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டில் 107 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

16.கன்னியாகுமரி நகராட்சியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல்

வெற்றித்தமிழகம் தொலை நோக்குத் திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கட்டமைப்புடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

17.தூத்துக்குடி மாநகராட்சியில் பேருந்து நிலையம் புனரமைத்து மேம்படுத்துதல்

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகில் போல்பேட்டை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு கூடுதல் வசதிகளான பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வளாகங்களுடன் 90 கோடி வணிக ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

18.தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்நோக்கு வணிக வளாகம் அமைத்தல்

சுற்றுலா நகரமான தஞ்சாவூர் மாநகராட்சியில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சிறு வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பல்நோக்கு வணிக வளாகம் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.