இனி ரேஷன் அரிசியை சாப்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்- அமைச்சர் வெங்கட்ரமணன்

 
இனி ரேஷன் அரிசியை சாப்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்- அமைச்சர் வெங்கட்ரமணன் 

முதலமைச்சர் விஜய் மக்கள் சாப்பிடக் கூடிய நல்ல தரமான அரிசியை வழங்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் வெங்கட்ரமணன் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேரடி கொள்முதல் நிலையத்தை அதிகப்படுத்தவேண்டும் என கருத்து தெரிவித்த செளமியா அன்புமணிக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுல 120 லட்சம் டன் தானியம் உற்பத்தி பண்றோம், அதுல 80 லட்சம் டன் தான் அரிசி, 40 லட்சம் டன் அரசும், மீதி 40 லட்சம் டன் தனியாரும் கொள்முதல் செய்றாங்க.. அதில் 14 லட்சம் டன் அரிசி வைக்க மட்டும் தான் நம்மிடம் இடம் இருக்கிறது. 2026 டிசம்பர் அல்லது 2027 ஜனவரிக்குள்ளாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும். முதலமைச்சர் விஜய் மக்கள் சாப்பிடக் கூடிய நல்ல தரமான அரிசியை வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசிகளை மக்களால் சாப்பிட முடியவில்லை. பெரும்பாலும் இட்லி,தோசைக்குதான் ரேஷன் அரிசியை பயன்படுத்துகின்றனர். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும்” என்றார்.