காதலுக்கு கண்ணில்லைன்னு இப்பதான் தெரியுது..! – 75 வயது முதியவரை மணக்கும் 30 வயது பெண்..!

 
1

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில், 75 வயது முதியவர் ஒருவருக்கும் 30 வயது இளம் பெண் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகும் விசித்திர சம்பவம் இணையதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ராம்சுகர் மற்றும் 30 வயதான ராணி ராஜ்புத் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் (Reels) வீடியோக்கள் செய்து வரும் ராணி ராஜ்புத், ராம்சுகரின் மகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.

அந்தச் சந்திப்புகளின் போது ராம்சுகருக்கும் ராணிக்கும் இடையே நட்பு உருவாகி, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. 45 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட இந்த ஜோடி, தற்போது தங்களது நிச்சயதார்த்தத்தை (Moth மோதிரம் மாற்றும் சடங்கு) உறவினர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடித்துள்ளனர். நவராத்திரி பண்டிகைக்குப் பிறகு இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க, இருவரும் மகிழ்ச்சியுடன் மோதிரம் மாற்றிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வளவு பெரிய வயது வித்தியாசத்தைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியையும் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

"உண்மையிலேயே காதலுக்குக் கண்ணில்லை போல..." என்று ஒரு பயனர் கமெண்ட் செய்ய, மற்றொருவர் "அப்போ நாங்களாம் என்ன பண்றது பாஸ்?" என நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"காதலுக்குக் கண்ணில்லைன்னு சொல்வாங்க... அதை இன்னைக்குக் கண்ணாரப் பார்த்துட்டோம்!" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.