"இனி PIN தேவையில்லை - கைரேகை போதும்"
Oct 8, 2025, 16:35 IST1759921513000
UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்கு பதிலாக Finger print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கைரேகை, முக அடையாளம் மூலம் UPI பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. PIN நம்பரை திருடி நிதி மோசடி ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக மும்பையில் நடைபெறும் Global Fintech மாநாட்டில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 ஆக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி UPI-ல் பணம் செலுத்த PIN நம்பர் தேவையில்லை, பயோமெட்ரிக் பரிவர்த்தனை வசதி அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனை வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


