நவ.13, நவ.25 தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை

 
ration shop

தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட வேலை நாளை ஈடுகட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ration shop


அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.தீபாவளி நெருங்குவதை ஒட்டி அனைத்து நியாய விலை கடைகளும் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக இன்றும் நவம்பர் 10ம் தேதியும் நியாய விலை கடைகள் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.முன்னதாக  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கியது. அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 3 மற்றும் நவம்பர் 10 தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டதை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 13 மற்றும் நவம்பர் 25 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.