ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

 
dpi

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு , பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம் . நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.  

teachers

ஆசிரியர்கள் இதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி முதல் மே மூன்றாம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையில் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.  இந்த சூழலில்  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது.

teachers

இந்நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.