1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை என்பது குறித்த அறிவிப்பினை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கிய நிலையில் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிவு பெற இருப்பதால் காலாண்டு தேர்வுகள் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. பல தனியார் பள்ளிகளில் எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில், மற்ற வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் காலாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1-3ம் வகுப்புகளுக்கு செப்.23 - அக்.2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல் 4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 - அக்.2 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.


