துறையூர், கள்ளக்குறிச்சி MLA-க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்! முதல்வர் விஜய் அதிரடி

 
s

துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து தலைமைக்கு தகவல் சென்றுள்ளது. இந்த புகார்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், முதல்வர் விஜய் உடனடியாக இரண்டு MLA-க்களிடமும் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளார்.

வெறும் விளக்கம் கேட்டதோடு நிற்காமல், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த குழு முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். விசாரணையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு பேருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் கொள்கைக்கும், கட்டுப்பாட்டிற்கும் எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் MLA-வாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்கப்படாது என்பதை முதல்வர் விஜய் இதன் மூலம் தெளிவாக காட்டியுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை அறிக்கை தான் அடுத்து என்ன நடக்கும் என்பதை முடிவு செய்யும். குற்றச்சாட்டு லேசானதாக இருந்தால் கடும் எச்சரிக்கையுடன் விடப்படலாம். ஆனால் குற்றச்சாட்டு தீவிரமாக உறுதி செய்யப்பட்டால், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம், MLA பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவது, ஏன் நிரந்தர நீக்கம் வரை கூட பாயலாம் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல்வர் விஜய் ஊழலுக்கும், ஒழுங்கீனத்திற்கும் எதிராக ஜீரோ டாலரன்ஸ் கொள்கையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.