அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யாத போலீசுக்கு நோட்டீஸ்

 
se

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்திரவிட்டும் கூட இந்த உத்தரவினை செயல்படுத்தாத போலீஸ் அதிகாரிகள் மேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் சென்னை குற்ற பிரிவு போலீசார் மோசடி பிரிவு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

 கடந்த 2011 மற்றும் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து பெயர் அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி . அப்போது வேலை வாங்கித் தருவதாக சொல்லி பண மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூர் சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, பிரபு, அண்ணா ,ராஜ் , சகாராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் நிலுவையில் இருக்கிறது. 

su

 இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடந்து வந்தது .  இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்து விட்டதாக சொல்லியும் சமரசமாக போக விரும்புவதாக தகவல் சொன்னதை ஏற்றுக் கொண்டு நான்கு பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

 செந்தில் பாலாஜி அவரது அண்ணன் அசோக்குமார் மீதான குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி பொறியாளர் தர்மராஜ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது .

பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் முடிவெடுத்ததால் தகுதியான மாணவர்கள் பணியில் சேர முடியவில்லை.   எங்களது மதிப்பெண் குறைத்து இருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.   இந்த மனுப் பலகட்டங்கள் விசாரணைக்கு பின்னர் சமரசகமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது.

 இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.   ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.  ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்துள்ளனர்.   

 இதனால் வழக்கு பதிவு செய்யாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.   இந்த மனுவை விசாரித்த நீதிபதி,  மனுதாரர்கள் தரப்பில் ஆஜராக அவமதிப்பு நடவடிக்கை கூறிய மனு மீது பதில் அளிக்க சென்னை குற்ற பிரிவு காவல் துறையில் வேலை மோசடி பிரிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதவியாளர் சுரேந்திரன் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல்துறை ஆய்வாளர்கள் ரெஜினா,  கலா ராணி ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.  வழக்கு மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.