அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய நோட்டீஸ்

 
tn

அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

tn

சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் தனியார் கேண்டீனில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம்  கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

ttn
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவகத்தின் கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது.