சிறுமியை கடித்த நாய்களை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த நோட்டீஸ்

 
நாய்


சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

tn

சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின.  பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் மகள் சுதக்ஷாவை, புகழேந்தி என்பவரது 2 வளர்ப்பு நாய்கள் திடீரென கடித்துக் குதறின. சிறுமி அலறியதைக் கேட்டு காப்பாற்றிய தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. பலத்த காயமடைந்த சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 வயது சிறுமியை கடித்துக் குதறிய ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வரும் 9ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏழு நாட்களுக்குள் வீட்டிலிருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உரிமம் இன்றி வளர்த்ததுடன், முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் மாநகராட்சி நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.