இளநிலை நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

 
 நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!


இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீர் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  நீட்  நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும்  தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தகுதித் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை நீட் தேர்வு  மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று, முன்னதாக  என்டிஏ அறிவித்திருந்தது.

நீட் தேர்வு

அதன் அடிப்படையில், நீட் விண்ணப்பப் பதிவு இன்று (மார்ச் 6) முதல் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இன்று காலை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள், பெற்றோர் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை nta.ac.in ,  neet.nta.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.