சேலத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 
ச்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு 03.08.2026 அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும், ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் தமிழ் மாதம் ஆடி 18-ஆம் நாளான 03.08.2026, திங்கட்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேற்படி, உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instruments Act 1881)ன் கீழ் வராது என்பதால், அரசின் பாதுகாப்புக்கான மற்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அன்று மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு எதிர்வரும் 22.08.2026, சனிக்கிழமை அன்று பணி நாளாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.