"விஜய் பெயர் இருக்கும் இடத்தில் நோட்டா..?"- பெரம்பூர் தொகுதியில் கொடுப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு
Apr 17, 2026, 16:40 IST1776424222000
விஜய் பெயர் இருக்கும் இடத்தில் நோட்டா சின்னம் அச்சிடப்பட்டு பெரம்பூர் தொகுதியில் கொடுப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நிற்கும் பெரம்பூர் தொகுதியில் 16 வரிசையில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை வியாசர்பாடி பகுதிக்குட்பட்ட மார்க்கெட் பகுதிகளில் 16-ஆம் எண் அருகே நோட்டா என அச்சிடப்பட்ட துண்டு சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது . தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வுக்காக வழங்கப்படும் துண்டு சீட்டுகள் போல இவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .அதே மார்க்கெட் பகுதியில் பரப்புரை மேற்கொண்டு வந்த தமிழக வெற்றி கழகத்தினர் அந்த தொண்டு சீட்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் . இதுகுறித்து மாவட்ட செயலாளர் தேர்தல் அலுவலர் சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.


