ராமதாஸ் இல்லத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை..!
Sep 4, 2026, 13:14 IST1788507863827
தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார். மேலும், சந்திக்க வருபவர்கள் அவரிடம் அரசியல் பேச முயற்சிக்கின்றனர். இந்நிலையில தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
‘அரசியல் துறவறம்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், “தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாஸை சந்திக்கலாம். அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் ராமதாஸை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

