தமிழ் பாடத்தில் ஒரு மாணவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை!!

 
school

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரு மாணவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை.

school

தமிழகத்தில்  10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில்  பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

10ம் வகுப்பு பொதுத்தேர்வை  9,14,320 மாணவ, மாணவியர்கள் எதிர்கொண்ட நிலையில்  8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39 ஆக பதிவாகியுள்ள நிலையில்  மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710 ஆகவும், மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904 ஆகவும் பதிவாகியுள்ளது. இருப்பினும் தமிழ் மொழியில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. 

schools leave
➤ 10ம் வகுப்பு பாட வாரியான தேர்ச்சி விகிதம்:

● தமிழ் - 95.55%

● ஆங்கிலம் - 98.93%

● கணிதம் - 95.54%

● அறிவியல் - 95.75% 

● சமூக அறிவியல் - 95.83%

School Education


➤ 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்:

● ஆங்கிலம் - 89

● கணிதம் - 3,649

● அறிவியல் - 3,584

● சமூக அறிவியல் - 320