4வது மாடியில் பணியாற்றிக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளி பலி!

 
building

அரியலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் 4-வது மாடியில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Northeastern-worker-killed-after-falling-during-medical-college-construction

அரியலூர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ கல்லூரி வளாகம், தங்கும் விடுதி, மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் மருத்துவமனை 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டுவருகிறது. இந்த பணியில் 570 வடமாநில தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 670 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 4-வது மாடியில் ஒட்டுக்கு போட்ட‌ இரும்பு பலகையை பிரித்து கொண்டிருந்தபோது, மேற்கு வங்காளம் தொழிலாளி மிந்து மண்டல் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.