போக்குவரத்துக்கழகத்தில் வடமாநில தொழிலாளர்கள்- த.வெ.க அரசு மீது உச்சக்கட்ட கோபம்
போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநர் பணிக்கு வடமாநிலத் தொழிலாளர்களை த.வெ.க அரசு பணியமர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநர் பணிக்கு வடமாநிலத் தொழிலாளர்களை த.வெ.க அரசு பணியமர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1800 நடத்துநர் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ள த.வெ.க அரசைக் கண்டித்துப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் MTC-யில் 1,800 நடத்துநர்கள் விவகாரத்தில் திட்டமிட்டு ஒரு தவறான செய்தி பரப்பப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
இந்த டெண்டர் திமுக ஆட்சிக்காலத்திலேயே (ஜனவரி 2026) வெளியிடப்பட்டது.
இது அரசு நிரந்தர பணி நியமனம் அல்ல, தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்களைப் பெறும் ஒப்பந்தம் (Outsourcing).
திமுக ஆட்சியில் போட்ட டெண்டர் தவெக அரசு செய்ததாக தகவல் பரபரப்பப்பட்டுவருகிறது.

