#BREAKING வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை- பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

 
assembly

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர்களைத் தமிழக அரசு நியமித்துள்ளது.


சென்னை நகரின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வெள்ளத் தயார் நிலையைக் கண்காணிக்க 8 அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிட்துள்ளது.நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாவட்டம் முழுவதையும் மேற்பார்வையிடுவார். 

மற்ற அமைச்சர்கள் விவரம் வருமாறு: 

திருவொற்றியூர் மற்றும் மணலி - ரமேஷ் 

மாதவரம் மற்றும் தொண்டியார்பேட்டை - லோகேஷ் 

ராயபுரம் மற்றும் திரு வி கா நகர் - அருண்ராஜ் 

அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை - விஜய் பாலாஜி 

கோடம்பாக்கம், வளசரவாக்கம் - டி.கே.பிரபு 

ஆலந்தூர், அடையாறு - விஜய் பார்த்திபன் 

பெருங்குடி, சோழிங்கநல்லூர் - கே.விக்னேஷ்