தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விலகியது - வானிலை ஆய்வு மையம் தகவல்
Jan 27, 2025, 10:03 IST1737952398663

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 100 நாட்கள் பெய்த நிலையில், இயல்பை விட 33% அதிகமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இதனிடையே வருகிற 30ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 31-01-2025: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.